எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்றைய நாள் மாவீரர் நாள்.இன்றைய நாளில் நாம் எமது தியாகிகளின் திருநாளாகஎமது தேசத்தின் பெருநாளாக, எமது போராட்டத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுகிறோம்.

உலக வரலாற்றில் எங்குமே , எப்பொழுதுமே நிகழ்ந்திராத அற்புதமான தியாகங்கள்இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்டவரலாறு தொட்டு நிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள்
எமது மாவீரர்கள்.

தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டு போன வீர மரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது:அடிமைத்தனத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டு ஒரு புயல் எழுநதது. சருகாகநெரிபட்ட தமிழன் , மலையாக எழுந்து நிமிர்ந்தான்; அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாகத் துங்கிக்கொண்டிருந்த தமிழ்த் தேசம் விழித்துக்கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால்எழுதப்பட்டிருக்கிறது

ரணகளமாக மாறியிருக்கிறது ; விடுதலைக்காக, எமது வீரர்கள் இன்றும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள் . இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக்சுற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில்நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக்
காட்சி தருகின்றன.
–தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 1994 ம் ஆண்டு மாவீரர் நாள் செய்தியிலிருந்து
–தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 1994 ம் ஆண்டு மாவீரர் நாள் செய்தியிலிருந்து