வடக்கில் பலாலி விமான நிலையத்தினை சூழவுள்ள பலஆயிரக்கணக்கான தமிழர் நிலங்கள் இன்றும் விடுவிக்கப்படாமல் ஸ்ரீலங்கா படையினர் வசம் காணப்படும் நிலையில் அபிவிருத்தி என்ற போர்வையில் பலாலி விமான நிலையத்தினை அவிபிருத்தி செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி விமான நிலையத்தினை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான அதிகளவான தனியார் காணிகள் காணப்படுகின்றன இந்த காணிகள் அபகரிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இந்த காணிகளை விடுவிப்பதற்கு எந்த அழுத்தத்தினையும் கொடுக்காத கூட்டமைப்பு
அரச நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டுக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு அபிவிருத்தி பற்றிதான் பேசிக்கொண்டிருக்கின்றதே தவிர உண்மையில் மக்களின் பிரச்சனையினை பேசவில்லை பலாலி விமான நிலையம் அபிவிருத்தியில் பறிபோகப்போகும் தமிழர் நிலங்கள் பற்றி எவரும் கதைக்கவில்லைஅரசின் ஊதுகுழல்களாகவே கூட்டமைப்பினர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ்மக்கள் காணிகளுக்குள் மக்களை அனுமதிக்கப்படாமல் அங்கு படையினரை தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் சிங்கள பேரினவாதம் செயற்பட்டு வருகின்றது.
வடக்கில் உள்ள புத்திஜீவிகளே இதுபற்றி சிந்தியுங்கள் புலம் பெயர் மக்களே இது பற்றி சிந்தியுங்கள் உங்கள் காணிகளும் பலாலி அபிவிருத்தி என்ற போர்வையில் பறிபோகலம்