மாணவர்கள் தங்களின் பாடசாலை புத்தகங்களை கண்ணாடி தாளிலான பையில் கொண்டுவருவது போன்று சாப்பாட்டு பெட்டியினையும் உள்ளே உள்ள சாப்பாடு வெளித் தெரியும் வகையில் கண்ணாடித் தாள் வகையிலாலான மூடியுனைக் கொண்டதாக இருத்தல் வேண்டும் என மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்குவிப்பதாக தெரிய வருகின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது , சர்வமத பிரதிநிதிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுட னான விசேட சந்திப்பு நேற்று மாலை ஜெசாக் நிறுவன மண்டபத்தில் இணைப்பாளர் சுகிர்தராஜா தலைமையில் இடம்பெற்றது. . கடந்த மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்பு சமூகங்களுக்குஇடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை சர்வமத நிறுவனங்களின் ஊடாக மத நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் பொருட்டு இடம்பெற்ற சந்திப்பின் இரண்டாம் கட்ட தொடராக இச் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் பாடசாலை மாணவர்களை பயமின்றி கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்துதல், அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனமெடுக்க வேண்டிய விடயம் , மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் , சமூகத்தினரிடம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான திட் டமிடல்கள் குறித்தும் கலந்துரையாடப் பட்டன, குறித்த கலந்துரையாடலின் போதே மாணவர்களின் புத்தகப் பை , உணவின் அளவு மற்றும் சாப்பாட்டுப் பெட்டி ஆகியன தொடர்பிலும் பகிரப்பட்டது . அத்துடன்
மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில் சந்தோசமான மனநிலையையும் கல்வி கற்கும் ஆர்வத்தினையும் ஏற் படுத்தும் வகையில் ”மகிழ் களம் ”விளையாட்டுக்கு களத்தினை ஊக்கப் படுத்துதல், சர்வமத போதனைகளை நூல் வடிவில் உருவாக்கி மாணவர்களிடையே விநியோகித்தல், இதனூடாக , கிராமங்கள் தோறும் மத நிறுவனங்களின் ஊடாக புரிதலை ஏற்படுத்துதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப் பட்டன,. இச்சந்திப்பில் அருட் தந்தை இம்மானுவேல். மௌலவி சுபியான் , சின்மியா மிஷன் சுவாமிஜீ , சர்வமத குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
.மேலும் ,
பாடசாலை மாணவர்கள் மிகுந்த அசௌரியங்களை சந்தித்து வருவதாகவும் கருத்துப் பகிரப்பட்டதுடன் விலைகொடுத்து வாங்கப்படட புத்தகப் பைகளுக்கு பதிலாக சாதாரண கண்ணாடி பொலித்தீன் பைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது .இந்நிலையில் சாதாரண விலையில் இருந்த அவ் கைப்பை விலை உயர்த்தப் பட்டுள்ளது மாணவர்கள் எடுத்துச் செல்லும் உணவுகள் சோதனை செய்யப் படுவதுடன் அவையும் வெளித்தெரியும் வகையிலான சாப்பாட்டு பெட்டியாக இருக்கவேண்டும் என்றும் அளவுக்கு அதிகமான சாப்பாடு இருப்பின் அதற்கான காரணமும் பாதுகாப்பு பிரிவினரால் கேட்கப்படுவதாகவும் தெரிய வருகின்றது.
[ ப. தர்மினி . ]




















































