அந்தி மாலை நேரமதில்
அடர்ந்த மௌனத்தை
சொல்ல முடியாது சோகத்தில்
சொற்களை இழந்து
கதறித் துடிக்கிறது வீதி
இயற்கையை அன்னை
நாட்டிவிட்ட பாலையும் வீரையும்
வீரம் காட்டிய புலிவீரர்
இரத்தம் குடித்து ஏப்பமிட்ட வீதி
மங்கள நிகழ்வும்
மகிழ்ச்சியான வாழ்வும்
சிதையுண்டு போக
சிந்தை கலங்க
கனத்த இதயத்தோர்
கண்ணீரில் நனைத்த வீதி
எத்தனை உயிர்களை
எத்தனை உடமைகளை
எத்தனை கற்பைப் பலி
எடுத்த கொடூரத்தை
மொத்தமாய் பார்த்த
ஒற்றைச் சாட்சி- இந்த
யு9 வீதி….
-நிலவன்




















































