ஊரடங்கு வேளையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆனது 1983 ஆம் ஆண்டு யூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தினை நினைவு படுத்துவதாக முன்னாள் வடமாகாணசபை முதல்வரும் தமிழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் தமிழ்,சிங்கள மற்றும் முஸ்லீம் புத்திஜீவிகளும் நியாயமான அரசியல் வாதிகளும்,சமயோசிதமாக காய்களை நகர்த்த வேண்டியதன் தேவை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.





















































