அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் அனைத்து பயணிகளிடம் அறிக்கை மூலம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பயணிகள் தாங்கள் கொண்டுவரும் பொதிகளை பஸ்ஸில் எடுத்துச் செல்லுதல், வேறு இடங்களில் வைத்தல், பொதிகளை எடுக்காமல் இறங்கிச் செல்லுதல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் காயமடைந்தவர்களுக்கும் அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
அத்துடன் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.
அனைத்து பஸ் பயணிகளும் இவ்விடயம் தொடர்பில் பொறுமையுடனும் புத்தியுடனும் செயற்பட வேண்டும். இது தொடர்பில் அகில இலங்கை பயணிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது-
பயங்கரவாத தாக்குதல்களை முறியடிப்பதற்கு பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்விடயம் தொடர்பில் பயணிகள் பொறுப்புடனும் அதேநேரம் பொறுமையுடனும் செயற்பட வேண்டும்.
பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் உரிமையாளர்கள் பொறுப்புடன் செயற்படுவதை நாம் பாராட்டுகின்றோம்.




















































