இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த நிலையில் வெடிகுண்டு வீசியவனை நேரில் பார்த்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். செண்ட் செபஸ்டின் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நடந்தது.
இந்த குண்டுவெடிப்பில் திலீப் பெர்ணாண்டோ (66) மற்றும் அவர் குடும்பத்தார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
இது குறித்து திலீப் கூறுகையில், குண்டு வெடிப்புக்கு முன்னர் அன்று காலை 7.30 மணிக்கு எனது மனைவி மற்றும் குடும்பத்துடன் செண்ட் செபஸ்டின் தேவாலயத்துக்கு வந்தேன்.
அப்போது அங்கு கூட்டமாக இருந்ததால் வேறு தேவாலயத்துக்கு செல்ல நானும் என் மனைவியும் முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பினோம்.
அப்போது என்னுடைய இரண்டு பேத்திகள் உட்பட என் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தேவாலயத்தின் வாசலிலேயே நின்றிருந்தனர்.
அப்போது 30 வயதான இளைஞர் ஒருவர் கையில் கனமான பையுடன் வந்துள்ளார். பின்னர் என் பேத்தியின் தலையில் கை வைத்து விட்டு தேவாலயத்தின் உள்ளே சென்றார், அவர் தான் வெடிகுண்டோடு வந்த நபர் என கூறியுள்ளார்.
மேலும், அவரை பார்க்க அப்பாவியாக இருந்தது, அவர் எந்த விதம பயமும், பதட்டமும் இன்றி நிதானமாகவே காணப்பட்டார்.
அவர் உள்ளே சென்றவுடன் வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
பின்னர் என் குடும்பத்தார் அங்கிருந்து பதறியடித்து கொண்டு ஓடினார்கள். இப்படி தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என கூறியுள்ளார்.




















































