நந்திக் கடலோரம்
ஈவிரக்கமற்ற இன அழிப்பு
உயிர்களைப் பலிகொண்ட
கொடூர மரணங்கள்
நள்ளிரவில் கிபீர் தாக்குதல்
தற்காலிகமாக வாழ்விடங்கள்
எரியும் புகையில்
செத்தவர்கள் சாக
கயமடைது எஞ்சி
உயிர் பிழைக்க வந்தவர்கள்
வைத்தியசாலை வாசலிலே
இரத்தம் வடிய உடல் சிதறுண்டு
செத்து விழுந்தர்கள்
கொத்துக்கொத்தாய்
குருதி நனைத்திட…
பூவும் பிஞ்சுமாய்
புலுதியில் விழ்ந்திட…
குஞ்சு குருமனாய்
குடல் கிழிந்திட…
ஒட்டிய வயிற்றுடன்
மரணம் துரத்திட…
நடைப்பிணங்களாக
நாட்கள் நகர்ந்திட…
யார் யாரைப் பராமரிப்பது
கைவிடப்பட்டு ஆதரவற்று
வீதியில் புதையுண்டு போன
வாழ்வுதணை நினைக்கையில்
மனம் கனக்கிறது.
இன்றும்
– நிலவன்





















































