இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள், திருகோணமலை மாவட்ட இலவச சட்ட உதவி மையத்தில், அருட்தந்தை யோகேஸ்வரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது உயிர்தப்பிய சிவனேசன் சப்தமி மற்றும் அவரது தாயாரால் நினைவேந்தல் சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.
மேலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல், மற்றும் இந்து மதத் தலைவர்கள் உட்பட பொது மக்கள் பலர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.























































