- நெடுங்கேனி களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்
- வவுனியா மறவன்குளத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்
- முருகனூர் பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தல்
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுங்கேனி களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் நெடுங்கேனி பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.
இந் நினைவேந்தல் நிகழ்வில் 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் மாவீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு தமது உறவுகளை நினைத்து கண்ணீர் சிந்தி கதறி அழுதனர்.









அத்துடன் வவுனியா மறவன்குளம் இரண்டாம் ஒழுங்கை பாலவிநாயகர் ஆலயத்தில் பொதுமக்களின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.






மற்றும் விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த சகோதரர்களின் ( வீரவேக்கை சசி , கப்டன் சசி , மேயர் மலரவன் ) நினைவாக முருகனூர் பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தின் அவர்களின் சகோதரனினால் மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது.
























































