காணாமல் போன தனது பிள்ளையை தேடி அலைந்த தந்தையொருவர் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் மரணமானார். 56 வயதுடைய சி.யோகராசா என்பவரே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையைத் தேடிவந்த யோகராசா, தனது பிறந்த தினமான நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.இவர் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் இணைப்பாளராக யோ.கலாரஞ்சினி என்பவரின் கணவராவார்.
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைத் தேடி அலைந்த தந்தை மரணம்!




















































