வடதமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்கள் தொல் பொருள் திணைக்களத்தினால் தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் புராதனச்சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த 2013ஆம் ஆண்டு ஆவணி மாதம் 16 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
அன்றைய தேசிய மரபுரிமைகள் அமைச்சராக இருந்த ஜகத்பாலசூரிய அவர்களின் உத்தரவுக்கமைய குறித்தவர்தகமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கரைதுறைப்பற்று,ஒட்டுசுட்டான்,மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வர்தக மானியில் அறிவிக்கப்பட்ட இடங்கள்.
இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான இடங்கள் புராதன தொல்லியல் சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன மக்கள் இவற்றை அறிந்து கொள்ளும் நோக்கில் வர்தகமானி அறிவித்தலில் வெளியான தகவல்களை வெளியிடுகின்றோம்.
2013.08.16 அன்று இது வெளியிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச செயலாளர்பிரிவில் ஆலங்குளம் கிராம அலுவலகர் பிரிவில் அமைந்துள்ள புராதனதூபியும் கட்டிட சிதைவும்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள அம்பகாமம் கிராமத்தில் இரணைமடு வட்டகாலிகுளம்,குளத்திற்கு கிழக்கே உள்ள சிதைவுகள் மேடும் அதனை அண்மித்த தொல்லியல் சிதைவுகளும்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்துஜயன் கட்டுக்குளம் எனும் இடத்தில் சிதைவடைந்த கட்டிடங்கள்,மதில் அதனை அண்மித்த தொல்லியல் சிதைவுகளும்,
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கற்சிலைமடு கிராமத்தில் பேராறு கட்டிடதிதைவுகளும் கற்தூண்கள் உள்ள தொல்லியல் சிதைவுகளும்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கொட்டியாமலை கிராமத்தில் உள்ள கொடிகச்சி கொட்டியாமலை எனும் இடத்தில் உள்ள நீர்வடி வெட்டப்பட்ட குகைகளும் கோபுரமேடும் கட்டிட சிதைவுகளும்.
ஒட்டுசுட்டானில் பண்டாரவன்னியன் கிராமத்தில் அமைந்துள்ள நிதன்பிடிய(புதையல்பிட்டி) தொல்லியல் சிதைவுகள்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கனகரத்தினபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தொல்லியல் சிதைவுகள்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்துஜயக் கட்டு கிராமத்தில் அமைந்துள்ள பேராறுபழமையான அணைக்கட்டு.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மன்னாகண்ணார்(மன்னாகண்டல்) புராதன தொல்லியல் சிதைவுகள்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கட்டுவான் கிராம அலுவலகர் பிரிவில் அமைந்துள்ள தொலிச்சமொட்டை கிராமத்தை சேர்ந்த புராதன கட்டிட சிதைவுகள்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஒட்டியமலை கிராமத்தை சேர்ந்த ஒட்டியமலை நீர்வடி வெட்டப்ப்ட குதைத்தொகுதியும் மற்றைய தொல்லியல் சிதைவுகளும்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்தையன் கட்டு கிராமத்தில் முத்துஜயன் கட்டு படைப்பயிற்சி பாடசாலை பூமியில் உள்ள புராதன தாதுகோபுரம்,சிலை,மண்டபம்,சிதைவடைந்த கட்டிடங்கள்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்துஜயன் கட்டு கிராமத்தில் அமைந்துள்ள முத்துஜயன் கட்டு படைத்தள பயிற்சி பாடசாலையை அண்மித்ததுள்ள மிகப் பழைமையான கட்டிட சிதைவுகள்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் பூமியில் உள்ள தொல்லியல் சிதைவுகள்.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் செட்டிமலை(செம்மலை)கிழக்குபகுதியில் உள்ள தாதுகோபுர மேடுகளும் ஏனையதொல்லியல் சிதைவுகளும்.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் குமுழமுனை மத்தியில் குமுழமுனை தண்ணிமுறிப்பு குளம் எனும் இடத்தில் உள்ள கோபுரமேடு,கற்தூண்கள் உள்ள தொல்லியல் சிதைவுகளும்.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் குமாரபுரம் கிராமத்தில் குமாரபுரம் ஸ்ரீசித்திரவேலாயுதம் முருகன் கோவிலை அண்மித்துள்ள தொல்லியல் சிதைவுகள்.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் குமுழமுனை கிராமத்தில் குமுழமுனை பிள்ளையார் கோவிலை அண்மித்துள்ள தொல்லியல் சிதைவுகள்.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் தண்ணிமுறிப்பு குளத்தின் பழைமையான மதகும் அதை அண்மித்த ஏனைய தொல்லியல் தடயங்களும்.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் ஆண்டான்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ள கோபுரமேடும் கட்டிடச்சிதைவுகளும்.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் தட்டன்கொடுவ கிராமத்தில் அமைந்துள்ள தட்டன்கொடுவ கோபுரமேடும் பாதக்கற்கள் உள்ள தொல்லியல் சிதைவுகளும்.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் கொக்கிளாய் கிராமத்தில் உள்ள வண்ணத்திக்குளம் தொல்லியல் சிதைவுகள்.
முல்லைத்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவு பொதுச் சந்தை.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் உள்ள பாலிநகர் கிராமத்தில் வவுனிக்குளம் சிவபுரம் ஸ்ரீமலை கோவில் பூமியில் உள்ள கற்தூண்கள் உள்ள தொல்லியல் சிதைவுகள்.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் கிரிசுட்டான் பறங்கிஆறு கிராமத்தில் உள்ள சிதைவடைந்த தாது கோபரம், கட்டிட சிதைவுகளும்.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் பாலிநகர் கிராமத்தில் அமைந்துள்ள கொல்லவிளாங்குளம் கிராமத்தை சேர்ந்த நாகதம்பிரான் கோவில் அமைந்துள்ள பூமியில்உள்ள தாதுகோபுரமேடு சிதைவடைந்த கட்டிடமும் கற்தூண்களும் பாதக்கற்களும்.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் சிராட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள வெட்டுநீராவி தாது கோபுரமேடு.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் மூன்று முறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள கொம்புஅச்சுக்குளம் கிராமத்தில் உள்ள கட்டிட சிதைவுகள்.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வன்னிவிளாங்குளம் கிராமத்தில் பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த பெரியகுளம் காட்டிற்குள் உள்ள தொல்லியல் சிதைவுகள்.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வன்னிவிளாங்குளம் கிராமத்தில் மிகப்பழைமையான செங்கல் மதிலும் அதன் தொல்லியல் சிதைவுகளும்.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் பூவரசங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பூவரசங்குளம் பத்திரகாளி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டும் தொல்லியல் சிதைவுகளும்.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் பாண்டியன் குளம் கிராமத்தில் கரும்புள்ளியான் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் குளம் சிவன் கோவில் பூமியில் உள்ள கட்டிடச்சிதைவுகளும் அதனை அண்மித்த சகல தொல்லியல் தடையங்களும்.
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கோபுரமேடும் அதனை அண்மித்துள்ள கற்தரையில் உள்ள தூண்களில் துவாரங்கள் உள்ள இடமும்.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் நட்டாங்கண்டல் கிராமத்தில் உள்ளமூன்று முறிப்பு செங்கல்பட்டு கிராமத்தில் உள்ள தாதுகோபுரமேடும் கட்டிட சிதைவுகளும்.
துணுக்காய் பிரதேசத்தில் தென்னியன்குளம் கிராமத்தில் உள்ள வண்ணாரிக்குளம் கிராமத்தை சேர்ந்த வெல்லியாவில்லு வண்ணாரிக்குளம் தொல்லியல் சிதைவுகள்.
உள்ளிட்ட இங்கள் வர்தகமானியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அறிவிக்கப்ட்ட போதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் அடையாளப்படுத்தப்பட்ட சில இடங்கள் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றதுடன் அங்கு புத்தர் சிலைகள் வைத்து பௌத்த வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.