சவுதாம்ப்டனில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த நான்காவது கிரிக்கெட் டெஸ்டில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.
தனது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களை குவிக்க, அதற்கு பதிலாக இந்தியா 273 ரன்களை எடுத்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 271 ரன்களை எடுத்தது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
வெற்றி இலக்கான 245 ரன்களை நோக்கி களத்தில் இறங்கிய இந்தியா ஒருகட்டத்தில் 3 விக்கெட்டுகளுக்கு 22 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் கோலி மற்றும் ரஹானே ஆகிய இருவரும் 100 ரன்களுக்கு மேல் ஜோடி சேர்த்தனர். ஆனால், கோலி ஆட்டமிழந்த பின்னர், இந்திய அணியால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்திய அணி 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழக்க போட்டியையும், தொடரையும் இங்கிலாந்து வென்றது