ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எச்சரித்துள்ளார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா.
இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதால், இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.




















































