மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகம் 83வது நாளாகவும் இன்றும் இடம்பெற்றுவருகின்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக பல்வேறு கஸ்டங்களையும் தாங்கியவாறு தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

தமக்கான தொழில் உரிமையினை இதுவரையில் யாரும் உறுதிப்படுத்தாத வகையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளதாக பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
அரசியல்வாதிகள் தமக்கான நியமனங்கள் வழங்கப்படும் வரையில் அழுத்தங்களை வழங்கவேண்டும் எனவும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர்.





















































