இசையமைப்பாளர் இளையராஜா வீடு முன்பு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இலங்கையில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் இளையராஜா கலந்துகொள்ளக் கூடாதென தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இளையராஜா வீட்டிற்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழீழ மக்கள் அடக்குமுறைக்கு மத்தியில் உரிமைகளை இழந்து, அடிமைகளாக, அச்சத்திற்கும், அவமானத்திற்கும் நடுவில் துடியாய் துடித்துக்கொண்டிருக்கும் இக்கால சூழலில் இந்த இசை நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சட்டத்துறை செயலாளர் வை.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை ஒழுங்கமைத்திருந்தார்.





















































